முல்லைத்தீவில் கடத்தப்பட்ட இளைஞர்கள்: பொலிஸார் விசாரணை(Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இளைஞர்கள் இனம் தொியாத இளைஞர் குழு ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளாா்கள்.
கோம்பாவில், வள்ளிபுனம் மற்றும் தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களே நேற்றைய தினம் (5) இவ்வாறு கடத்தப்பட்டுள்ளாா்கள்.
கடந்த வாரத்தில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கல்லாற்று பகுதியினை சேர்ந்த இளைஞன் புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞா்களால் தாக்கப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட இளைஞர்கள்
இதனை தொடா்ந்து மோதலின் போது தாக்கிய மூன்று இளைஞர்களை, நேற்று எதிா் இளைஞர் குழு டிப்பரில் கடத்தி சென்று கடுமையாக தாக்கியுள்ளாா்கள்.

இவ்வாறு கடத்தி செல்லும் போது விசுவடு பகுதியில் டிப்பர் சில்லு பாலத்தில் மோதி ரயர் வெடித்துள்ளது.
சம்பவ இடத்தையடைந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், கடத்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
விசாரணை

மேலும், கடத்தலுக்கு உபயோகிக்கப்பட்ட டிப்பர் வாகனம் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் உரிமையாளர் தொடர்பிலும் வாகனம் சாரதி தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றாா்கள்.
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan