புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கை
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை நடைபெற்றது.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய வளாகத்தில் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் இந்த பரிசோதனை நடவடிக்கை நடைபெற்றது.
பராமரிப்பு தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது
முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி.அமரதுங்க அவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டார்.
பொலிஸாரின் அணிவகுப்பு, பொலிஸ் உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ பரிசோதனையும் வாகன பரிசோதனையும், அலுவலக கட்டடங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்கள் உள்ளிட்ட பராமரிப்பு தொடர்பாக பரிசோதிக்கப்பட்டது.
அத்தோடு பொலிஸாரின் நலன்கள் பற்றியும் கேட்டறிந்தார். இந்த அணிவகுப்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தின் பொலிஸார் பங்கேற்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |













