சமூக ஊடகங்களில் புகைப்படம் பகிர்ந்த விவகாரம் : பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம்
கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஒருவர், தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லொக்கு பெட்டி என்ற பாதாள உலகக்கும்பல் தலைவரின் துப்பாக்கிதாரியாக ஊடகங்களில் அடையாளம் காணப்பட்ட விராஜ் ரஷ்மிக டி சில்வா என்ற அல்மேதா, காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறி, அந்தத் தகவலை சமூக ஊடகங்களில் அவர் பதிவிட்டதே அவரது பணியிடை நீக்கத்துக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் யூடியூபர்கள்
சம்பந்தப்பட்ட அந்தக் குறிப்பை கரந்தெனிய பொலிஸ் நிலைய குறிப்பேட்டில் பணியிடை நீக்கத்துக்கத்துக்குள்ளான குறித்த இன்ஸ்பெக்டர் பதிவிட்டிருந்தார்.

விராஜ் ரஷ்மிகவின் கொலை சம்பவம் பொலிஸ் குழுவொன்றினால் நடத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் 'பொய்த் தகவலை' வெளியிட்டதற்காக, சம்பந்தப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஊடகச் செய்தியொன்று தெரிவிக்கிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் யூடியூபர்கள் மற்றும் இன்னும் சிலர், 'பொலிசார் மீது பழி சுமத்தி, விராஜ் ரஷ்மிகவின் கொலைச் செய்தியைப் பரப்பியுள்ளனர்' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து தெற்கு மாகாணப் பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தல்களின் பேரில் விசாரணைகள் நடத்தப்பட்டது.
கொலைச் சம்பவம் தொடர்பில்
காலி மாவட்ட குற்றப்பிரிவு வளாகத்தில் உடைந்த தூண், உணவறையில் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மூடி போன்றவற்றின் புகைப்படத்தை ஒரு சமூக ஊடகப் பக்கம் பதிவிட்டிருந்ததுடன், இந்தப் புகைப்படங்களை இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் எடுத்ததாகக் கூறப்பட்டது.

காலி மாவட்ட குற்றப்பிரிவில் உள்ள ஒரு சமையல்காரர், சம்பந்தப்பட்ட புகைப்படத்தை சம்பந்தப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர்தான் எடுத்தார் என்று கூறியுள்ளார்.
பொலிஸாரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகவும், ஒரு கொலைசம் சம்பவத்தில் பொலிசாரைச் சிக்க வைக்க முயன்றதாகவும் இடைநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விராஜ் ரஷ்மிகவின் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரித்து வருகிறது.