நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
பண்டிகை காலம் முடிந்த பிறகும்,பொலிஸார் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ந்தும் மக்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நெடுஞ்சாலை சாரதிகள் கவனத்திற்கு..!
மேலும் கூறுகையில்,“குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதற்கான சோதனைகள் தொடரும்.
நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் சாரதிகள்,பாதையோரம் வாகனங்களை நிறுத்தி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதேவேளை ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.