மேல் மாகாணத்தில் தீவிர சுற்றிவளைப்பில் பொலிஸார் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு காரணமாக மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய அதிகமான பொலிஸ் அதிகாரிகள் மேல் மாகாணத்தில் விசேட கடமைக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
போக்குவரத்தை கட்டுப்படுத்தவும், சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்தவும், மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், நகர்ப்புறங்களில் மோசடி செய்பவர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கடந்த வருடங்கள் வெளியான அறிக்கைக்கமைய டிசம்பர் மாத இறுதி வாரங்கள் நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரிக்கும் காலப்பகுதியாகும்.
இதன் காரணமாக போக்குவரத்து விதிகள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.