போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு
நாட்டில் போதைப் பொருள் கடத்தலில் பிரதானமாக ஈடுபடுவோர் தொடர்பில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்குள் போதைப் பொருட்களை கடத்தும் 25 பிரதான கடத்தல்காரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்குள் போதைப் பொருள் கடத்தும் பிரதான நபர்களில் பலர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் போதைப் பொருள் வர்த்தகர்களில் பலர் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு பேணுவது தெரியவந்துள்ளது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த போதைப் பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.