யாழில் குழந்தையை பிரசவித்து தப்பிச்சென்ற சிறுமியை கண்டுபிடித்த பொலிஸார்
யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த பின்னர், குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த வாரம் 15 வயதான சிறுமி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது தாயரும் சிறுமியுடன் உதவிக்கு நின்றுள்ளார். சிறுமிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் சிறுமியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து, அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , குழந்தையை பிரசவித்த சிறுமியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
25 வயது இளைஞன் விளக்கமறியலில்
சிறுமியை தகாத உறவுக்குட்படுத்தி கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கடந்த 12ம் திகதி கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

துன்னாலையில் கராஜ்ஜில் பணியாற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த 15 வயது சிறுமி மந்திகை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பிறந்த குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நலமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணைகளின் அடிப்படையில், சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய இளைஞனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam