பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு (Video)
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்றைய தினம்(09.10.2023) அல்வாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் அருமைராசா சிந்துஜன் (வயது 27) எனும் நபரே காயமடைந்துள்ளார்.
பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
பதவி விலகல் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா தெரிவித்துள்ள விடயம்! நீதிபதிக்கே நியாயம் கிடைக்காத இலங்கை(Photos)
அதில் சந்தேகநபர் காலில் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan