யாழில் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்!
யாழ். வலி.கிழக்கு பிரதேச சபையில் ஈபிடிபி உறுப்பினரொருவர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் ஊரெழு பகுதியில் இன்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஊரெழு பகுதியில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த போது தலைக்கவசம் இன்றி இருவர் ஆபத்தான முறையில் பயணித்துள்ளனர்.
இதன்போது அவர்களை மறித்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்று தண்டப்பணம் எழுத முற்பட்ட போது அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார்.
இதன்போது பிரச்சினை எல்லை மீறிச்சென்றமையினால் பொலிஸார் வாகனத்தை நோக்கி இருமுறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.





விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

Bigg Boss 9: நாளை பிரம்மாண்டமாக ஆரம்பிக்கவுள்ள பிக் பாஸ் சீசன் 9: கசிந்தது போட்டியாளர்கள் விபரம்! Manithan

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam
