யாழில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸார் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
விபத்தினை ஏற்படுத்திய சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்து சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மதுபோதையில் காணப்பட்டதாக வைத்திய அதிகாரிகள் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் டிப்பர் வாகனம் மோதி துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதியை மருத்துவ பரிசோதனைக்காக அச்சுவேலி பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தியுள்ளனர்.

மதுபோதையில் இருந்த உத்தியோகஸ்தர்கள்
இதன்போது இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மதுபோதையில் இருந்தமையை கண்டறிந்த சட்ட வைத்திய அதிகாரி, பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக முதல் கட்டமாக திணைக்கள மட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri