ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது (PHOTOS)
மன்னார்
மன்னார் இராணுவ புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து மன்னார் தாராபுரம் பிரதான வீதியில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (6) மதியம் இடம்பெற்றுள்ளது.
மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து சுடார் 1 கோடி ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரும், கைப்பற்றப்பட்ட ஐஸ் ரக போதை பொருளும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம்
சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் (6) இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
சாவகச்சேரி சங்கத்தானைபுகையிரத நிலையப் பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஒருவர் ஈடுபடுவதாக 52ஆவது படைப்பிரிவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது சாவகச்சேரி மடத்தடிப் பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
