திரைப்பட பாணியில் விரட்டிச் சென்று துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட பொலிஸார்!
இரத்மலானையில் வான் செலுத்தி சென்ற சாரதி ஒருவரை பலமுறை நிறுத்துமாறு கூறியும் அவர் நிறுத்தாமல் சென்றதால் பொலிஸார் அவரை திரைப்பட பாணியில் துரத்தி சென்று துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (25.10.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
பிலியந்தலையிலிருந்து கட்டுபெத்த வழியாக பயணித்த வான், கோலுமடம சந்திப்பில் போக்குவரத்து பொலிஸாரின் அறிவுறுத்தல்களை பின்பற்றியது.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து, வானை துரத்திச் சென்ற பொலிஸார், பெலெக்கடே சந்திக்கு அருகில் அதன் முன் மற்றும் பின்புற டயர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தி, அதனைத் தடுக்க முயன்றனர்.
துப்பாக்கிச் சூடுகளுக்குப் பிறகும், ஓட்டுநர் இரத்மலானை தொடருந்து நிலையம் உள்ள பகுதி வரை தப்பிச் சென்றார். பொலிஸார் அவரை மடக்கி பிடித்ததையடுத்து, அவர் தப்பி ஓடிச் செல்ல முயன்றார்.
இதனையடுத்து, கீழே விழுந்த அவரது முகத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வானை ஓட்டிச்சென்ற ஓட்டுநர், கல்கிரியாகமத்தைச் சேர்ந்த சுற்றுலாப் போக்குவரத்து நடத்துனராக பணியாற்றுவதாகவும் அவர் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேகநபர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025