அவசர சிகிச்சைக்காக வெளிநாடு புறப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச..! மீண்டும் நாடு திரும்புவது தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச செப்டெம்பர் 24 திகதி நிதி குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச இன்று காலை (16) சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற நிலையில், விமான நிலையத்தில் வைத்து அவருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் நாடு திரும்பும் ஷிரந்தி
இதற்கமைய, ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஷிரந்தி ராஜபக்சவுடன் ரோஹித ராஜபக்சவின் மாமியாரான ஏன் டி லிவேராவும் புறப்பட்டுச்சென்றுள்ளதுடன், அவர் ஷிராந்தி ராஜபக்சவை சிங்கப்பூரில் சிகிச்சைக்காக பரிந்துரைத்த பின்னர், நாளை மறுநாள் நாடு திரும்புவார் என்றும் கூறப்படுகின்றது.
பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் சிறிலிய சவியா கணக்கு தொடர்பான விசாரணைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
வாக்குமூலம் அளிக்குமாறு அழைப்பாணை
அதன்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக செப்டெம்பர் 24 ஆம் திகதி தங்கல்லே கார்ல்டன் இல்லத்திற்கு வருமாறு ஷிரந்தி அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது.
ஷிரந்தி ராஜபக்ச தனியார் வைத்தியசாலையிலிருந்து நேரடியாக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூருக்கு புறப்படுவதற்காக சென்றிருந்தார்.
இதன்போது, செப்டம்பர் 24 அன்று முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் விமான நிலையத்தில் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து அவசரமாக வெளியேறிய ஷிரந்தி ராஜபக்ச! கடைசி நிமிடத்தில் கிடைக்கப்பெற்ற கடிதம் - ஏற்பட்டுள்ள சிக்கல்