வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் பொலிஸார் குவிப்பு
வவுனியா - வெடுக்குநாறிமலைக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழு சென்றுள்ள நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று (12.09.2026) காலை அப்பகுதிக்கு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தனர்.
அதேநேரம் அப்பகுதியில் சைவ மக்களும் வழிபாடுகளுக்குத் சென்றிருந்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
மறிக்கப்பட்ட வாகனங்கள்

அதேநேரம் ஆலயத்திற்குச் செல்கின்ற சைவ மக்களுடைய வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் மறித்து, அவர்களை நீண்ட தூரத்திற்கு நடந்து செல்லவே அனுமதிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழ் தேசிய பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந.காண்டீபன், வவுனியா வடக்கு பிரதைச சபை உப தவிசாளர் வி. சஞ்சுதன் உள்ளிட்டவர்களும் ஆலயத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




