சட்டத்தரணியிடம் கையடக்க தொலைபேசியை கோரிய பொலிஸார்
சட்டத்தரணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் உதவியாளர் ஒருவர் சம்பந்தப்பட்ட வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, பொலிஸ் தரப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு எழுதிய கடிதத்தில், சட்டத்தரணிகள் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
சட்டத்தரணி தினேஸ் தொடங்கொட மற்றும் அவரது வாடிக்கையாளரான ஜனாதிபதி விக்ரமசிங்கவின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லூவ ஆகியோர் கொழும்பில் அண்மையில், தாக்கப்பட்டதை அடுத்து, இந்த கோரிக்கை¸ தினேஸ் தொடங்கொடவிடம் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோரிக்கை சட்டவிரோதமானது
2025 மே 18ஆம் திகதியன்று கொழும்பு 05, டாபரே மாவத்தையில், அடையாளம் தெரியாத இரண்டு பேர், பாதிக்கப்பட்டவர்களின் வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, ஹல்லூவவுக்குச் சொந்தமான ஒரு ஆவணத்தை கைப்பற்றிச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் நிகழ்ந்தது.
தாக்குதலைத் தொடர்ந்து, கொழும்பு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், விசாரணைக்காக, கையடக்கத் தொலைபேசியை தம்மிடம் ஒப்படைக்குமாறு தொடங்கொடவிடம் வாய்மொழியாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், ஒரு சட்டத்தரணியின் கையடக்க தொலைபேசியில் இரகசியமான தனிப்பட்ட மற்றும் தொழில்முறை தகவல்கள் இருக்கலாம்.
எனவே, அவற்றை முறையான நீதிமன்ற உத்தரவு இல்லாமல் கோர முடியாது என்பதால், அத்தகைய கோரிக்கை சட்டவிரோதமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
