முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை
வவுனியா பழைய பேருந்து நிலையப்பகுதியில் முகக்கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடுபவர்களுக்கு எதிராக பொலிஸார் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இன்று (22) காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையின்போது முகக்கவசம் அணியாமல் வீதிகளில் நடமாடும் பலருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், அவர்களுக்கு முகக்கவசம் அணிவித்து அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதேவேளை தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்திப்பிடித்த பொலிஸார் அதில் ஒருவர் முகக்கவசம் அணியவில்லை இதையடுத்து அவர்களின் மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்து அவர்கள் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இந்நடவடிக்கைக்குப் பொதுமக்கள் தமது
ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri