காணாமல் போன 15 வயது சிறுமி தொடர்பில் தகவல் இல்லை- தேடும் பணி தொடர்கிறது
கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கூறப்படும் மஹரகமையை சேர்ந்த 15வயதான சிறுமியை தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
குறித்த சிறுமியை கண்டு பிடிக்கும் வகையில் பொலிஸார் சிறப்பு அணி ஒன்றை அமைத்துள்ளனர்.
மஹரகம, நாவின்ன என்ற இடத்தை சேர்ந்த நேஹா கௌமதி ஹேரத் என்பவரே காணாமல் போயுள்ளவராவார்.
இவரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார், இவர் 5அடி 3 அங்குலம் உயரமானவர் என்பதுடன் மெலிந்த உடலமைப்பைக் கொண்டவர் என்று பொலிஸார் அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இவரை பற்றி தெரிந்தவர்கள் - மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரி ஊடாக 071-8591645, 011-2850222 அல்லது மஹரகம பொலிஸ் நிலையத்தின் 011-2850700 என்ற இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri