கொழும்பில் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
கொழும்பு(Colombo) குற்றப்புலனாய்வு பிரிவினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கட்டானை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று(19.04.2024) ப்ளுமென்டல் பொலிஸ் பிரிவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, இவரிடமிருந்து 800 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கை
அதுமட்டுமன்றி, பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி முதல் கட்டானை பொலிஸ் நிலையத்தில் இருந்து சீதுவ பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு, இவர் கடமைக்கு சமூகமளிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
இவர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறியும் நிறுத்தாமல் சென்றமையினால் பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் அதனை நிறுத்தி சேதனையிடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சில காலமாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
