வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகத்தர் பலி (Video)
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று இரவு (08.09.2023) ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி விளக்கு வைத்த குளத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மேலதிக விசாரணை
யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்த கப் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வவுனியாவில் இருந்து புளியங்குளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணை ஒமந்தை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விபத்தில் கண்டியை சேர்ந்தவரும் புளியங்குளம் பொலிஸ் கான்ஸ்டபிளுமான 55 வயதுடைய கருணாதிலக்க என்பவரே பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
