பொலிஸாரின் செயற்பாடுகளும் கண்காணிக்கப்படும்: தேசபந்து தென்னகோன்
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்புக்களுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்காணிக்கப்படுவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் பம்பலப்பிட்டி பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பங்குபற்றிய போது கூறியுள்ளார்.
சட்ட நடவடிக்கைகள்
மேலும், குற்றச் செயல்களை மேற்கொள்வோருடன் தொடர்பு பேணும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் தராதரம் பாராது தண்டிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு அஞ்சப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல பாதாள உலகக் குழு தலைவர் ஹரக் கட்டா எனப்படும் நதுன் சம்பவத்துடன் நெருங்கிய தொடர்பு பேணிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam