மேர்வின் சில்வாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு (Photos)
இன ரீதியிலான சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மேர்வின் சில்வாவின் கருத்துக்கு ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, விகாரைகள் மீதும் பிக்குகள் மீதும் கை வைத்தால், கை வைப்பவர்களது தலையை எடுத்து களனிக்கு கொண்டு செல்வதாக, களனியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தெரிவித்தார்.

அவரது இந்த கருத்திற்கு பலரும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் மேர்வின் சில்வாவின் கருத்துக்கு எதிராக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்துள்ளார்.
இனவாத கருத்துக்களை தூண்டி வன்முறையை ஏற்படுத்துவதற்கு மேர்வின்
சில்வா முயல்வதாக அவர் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam