மொட்டு கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரை விசாரணைக்கு அழைத்த பொலிஸார்
பொதுஜன பெரமுன கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் விசாரணைக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்றையதினம் (4) நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் உறுப்பினராக இருந்த ஒருவர், நாமல் ராஜபக்சவின் (Namal Rajapaksa)பெயரைப் பயன்படுத்தி, பலரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபா நிதி மோசடி செய்துள்ளார்.
நிதி மோசடி
இந்நிலையில், கீதநாத் காசிலிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நிதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் அந்த உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை கட்சி மேற்கொண்டு வருவதாக கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
