தென்மாகாணத்தில் உயரமான மதில்களைக் கொண்ட காணிகள் தொடர்பில் பொலிஸார் தீவிர கவனம்
தென் மாகாணத்தில் உள்ள உயரமான மதில்களைக் கொண்ட காணிகள் தொடர்பில் பொலிஸார் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
அண்மைக் காலத்தில் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுற்றிலும் உயரமான மதில்களைக்கொண்ட காணிகளில் எவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பதை ஒவ்வொரு பொலிஸ் நிலைய மட்டத்திலும் தனியாகக் கண்காணிக்கவும், அதுதொடர்பான பட்டியல் ஒன்றைப் பேணிவரவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
புலனாய்வு நடவடிக்கை
அண்மைக்காலத்தில் தென்னிலங்கையின் தங்காலை, சீனிமோதர பிரதேசத்தில் உயரமான மதில்களைக் கொண்ட காணியொன்றில் இருந்து ஐஸ் போதைப்பொருள்கொண்ட இரண்டு லொறிகள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் மித்தெனிய பிரதேசத்தில் உயரமான மதில் கொண்ட இடமொன்றில் இருந்து ஐஸ் போதைப் பொருளுக்கான மூலப்பொருட்கள் கொண்ட இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை ஆகிய நிகழ்வுகளின் பின்னர் மேற்குறித்த அறிவுறுத்தல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தென்னிலங்கையின் கடற்கரைப் பிரதேசங்களை அண்டியதாக விசேட புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam