சீமான் வீட்டில் நடந்தது என்ன! வழக்கறிஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் (Seeman) வீட்டில் ஏற்பட்ட குழப்பம் அரசியல் காரணங்களுக்காக அவரது நற் பெயரை மக்கள் மத்தியில் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு வழக்கறிஞர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, காவலாளிகள் தாக்கப்பட்ட சம்பவம் பொலிஸாரின் அடாவடித்தனத்தை வெளிப்படுத்துவதாகவும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சீமானின் வீட்டில் ஒட்டப்பட்ட அழைப்பாணையை கிழிப்பதற்கு அங்குள்ளவர்களுக்கு உரிமையுள்ளது எனவும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சட்டப் போராட்டம்
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட குறித்த காவலாளிகள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, சீமானின் காவலாளிகள் இருவரும் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மேலும், அத்து மீறி நுழைந்து காண்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்ட பொலிஸாரை தண்டிக்கும் முகமாக எமது சட்டப் போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் எனவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |