செவ்வந்தியும், இராணுவ வீரரும் உடை மாற்றியது எங்கே..! தீவிரமாக தேடும் ரோமி
இலங்கையில் கடந்த சில நாட்களாக இடம்பெறுகின்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் நாட்டை உலுக்கிய வண்ணம் இருக்கின்றன.
குறிப்பாக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்விக் குறியை உருவாக்கியுள்ளது.
அந்தவகையில் குறித்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பாதாள உலகக் குழுவின் முக்கியஸ்தர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்டார்.
இவரது படுகொலைக்கு முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரும் செவ்வந்தி என்று பொலிஸாரால் அறியப்படும் பெண் ஒருவருமே முக்கிய சந்தேகநபர்களாக இனங்காணப்பட்டனர்.
எனினும், தற்போது பொலிஸார் இன்னுமொரு விடயத்தைக் கூறியுள்ளனர். அதாவது சம்பவ தினத்தன்று துப்பாக்கி சூட்டை நடாத்திய துப்பாக்கிதாரி, தாம் தற்போது கைது செய்துள்ள துப்பாக்கிதாரியா என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்கள் ஒன்றாக தப்பிச் செல்லும் போது எவ்வாறு வழிமாறினார்கள். உண்மையில் தற்போது கைதாகிய துப்பாக்கிதாரி அவர்தானா இல்லை துப்பாக்கிதாரியின் உருவத்தில் இருக்கும் இன்னும் ஒருவரா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தநிலையில் பொலிஸார் ரோமி என்ற மோப்ப நாயை களத்தில் இறக்கி தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விடயங்களை கீழுள்ள காணொளியில் காணலாம்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |