வெடுக்குநாறிமலையில் கஜேந்திரன் எம்.பிக்கு இரவில் நடந்தது என்ன..!
வவுனியா வெடுக்குநாறி மலையில் நேற்றையதினம் சம்பவித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது பொலிஸார் தாக்கியுள்ளனர்.
இது மட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற மரியாதையை அவருக்கு பொலிஸார் கொடுத்திருக்கவில்லை.
இதுமட்டுமன்றி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை தாக்கி, பொலிஸார் கைது செய்ய முயன்றதுடன், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து, அவரை தூக்கிச் சென்று ஆலய முன்றலில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
காட்டுப் பகுதியில் விபத்து
வெடுக்குநாறிமலையில் நேற்றையதினம் இடம்பெற்ற பூஜை நிகழ்வுகளின்போது மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடித்துவிட்டு செல்லுமாறு தெரிவித்திருந்தனர்.
இருப்பினும் ஆறு மணிக்கு பின்னரும் வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பொலிஸார் இவ்வாறான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.
இது மட்டுமன்றி மாலை வேளையில் குடிநீருடன் ஆலயத்திற்கு உழவு இயந்திரம் வந்தபோது அந்த வாகனம் காட்டுப் பகுதியில் விபத்துக்குள்ளானதில். அதில் பயணித்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.