பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்
பாகிஸ்தானில் உள்ள ஒரு பொலிஸ் பயிற்சி மையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஆறு அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் எதிர்த் தாக்குதல்களில் தாக்குதல் நடத்த வந்த மூன்று தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6 அதிகாரிகள் படுகாயம்
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு பொலிஸ் பயிற்சி மையத்தை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இரு தரப்பினருக்கும் இடையே கிட்டத்தட்ட 5 மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தாக்குதலில் மேலும் 13 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும், அனைத்துப் பணியாளர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |