இரட்டைக்கொலை சம்பவம் - சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களிடம் அவசர உதவிகோரும் பொலிஸார்
ஹட்டன் - டிக்கோயாவில் ஒரு தம்பதியினரை கொலை செய்துவிட்டு அவர்களின் நகைகளை திருடி தப்பிச்சென்ற சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தங்க ஆபரணங்கள் கொள்ளை
கடந்த (21) ஆம் திகதி பிற்பகலில் ஹட்டன், டிக்கோயாவில் உள்ள கடையில் வசித்து வந்த தம்பதியினரை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கழுத்தை அறுத்துவிட்டு கொலை செய்து அவர்கள் அணிந்திருந்த சுமார் (18 பவுண்டுகள்) தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த பகுயில் இருந்து சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ள நிலையில், சந்தேகநபரை அடையாளம் காண உதவும் வகையில், ஹட்டன் பொலிஸார் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் உதவிக்கோரியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் 21 ஆம் திகதி காலையில் டிக்கோயா நகருக்கு வந்து, பல நகைக்கடைகளுக்கு சென்று, ஒரு தங்க நெக்லஸ் வாங்க விரும்புவதாக கூறி நகரை பல மணி நேரம் சுற்றித்திரிந்துள்ளார்.
தகவல் தெரிந்தால் அறிவிக்கவும்
அன்று மதியம் சுமார் 1:15 மணியளவில் அந்த தம்பதியினர் வசித்து வந்த கடைக்குள் நுழைந்து, கடைக்குள் பதுங்கியிருந்து பின்னர் அவர்களை கொன்றுவிட்டு, அன்று மாலை சுமார் 5:30 மணியளவில் கடையை விட்டு வெளியேறியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளதுடன், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகரவை 071 8591114 என்ற இலக்கத்திற்கு அல்லது ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர் 071 8591117 என்ற இலக்கத்திற்கு அல்லது ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி 071 8593163 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam
ஏர் பிரான்ஸ் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்த அமெரிக்கா: ஒற்றை பயணியால் நடுவானில் உருவான பீதி News Lankasri