அவதானத்துடன் செயற்படவும்..! அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை
புதிய இணைப்பு
களுகங்கையின் ஆற்றுப்படுகையில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், களுகங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முற்பகல் 8.30 மணி முதல் அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சீரற்ற வானிலை காரணமாக அத்தனகலு ஓயாவை சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழைவீழ்ச்சியை கருத்திற்கொள்ளும்போது, அதிகளவிலான மழைவீழ்ச்சி களனி கங்கை ஆற்றுப் படுகையிலேயே பதிவாகியுள்ளது.
பலத்த மழை வீழ்ச்சி பதிவு
அத்துடன் களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகையை சூழவுள்ள இடங்களில் 50 முதல் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஆறுகளின் உயர்வடைந்த நீர்மட்டம் படிப்படியாகக் குறைந்து வருவதுடன், அதில் பெரியளவிலான அதிகரிப்பு எதுவும் காட்டவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
களனி கங்கையின் நாகலகம வீதிப் பகுதியின் நீர்மட்டமும் படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், அதில் மேலும் அதிகரிப்பு எதுவும் இல்லை எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.
வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்
அத்துடன் எல்லகாவ மற்றும் மில்லகந்த ஆகிய இடங்களின் நீர்மட்டங்களும் படிப்படியாகக் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி கங்கை, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்பட்டு பரிதாப நிலைமையில் இருக்கும் தமிழ், அடுத்து என்ன... சின்ன மருமகள் சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
எலான் மஸ்க்கிற்கு சீனா போட்ட ஸ்கெட்ச்: ஹனிடிராப்பில் தலைவர்களை சிக்க வைக்க சீனா திட்டம்? News Lankasri
ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan