கேரள கஞ்சா பொதிகளுடன் தென்பகுதியை சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பனைக்குளம் பகுதியில் நேற்று(28) மாலை ஒரு தொகுதி கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது தம்பனைக்குளம் பகுதியில் வைத்து 189 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் பிரதான வீதியூடாக மதவாச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றைப் பாதுகாப்பு தரப்பினர் இடை மறிக்க முற்பட்ட போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்று கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தம்பனைக்குளம் பகுதியில் வைத்துக் குறித்த வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர்.
இதன் போதே வாகனத்தில் பொதி செய்யப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்ட குறித்த கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் தென் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளும் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன்
முருங்கன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam