நீதிமன்ற வளாகத்தில் நடந்த தாக்குதல்.. பொலிஸ் அதிகாரி அதிரடி கைது
நேற்று (10) காலை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்குள் ஒரு சட்டத்தரணியை தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவரை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாக்கப்பட்ட சட்டத்தரணி, நீதிமன்றத்தில் முன்னிலையாகி பின்னர் நீதிமன்ற வளாகத்திலிருந்து தனது வாகனத்தை வெளியேற்ற முயன்றபோது இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
கடும் கண்டனம்
சட்டத்தரணி வாகனத்தை வெளியேற்ற முற்பட்ட போது சிறைச்சாலை பேருந்தில் வந்த பொலிஸ் அதிகாரி அவரிடம் பேருந்து உள்ளே நுழையும் வரை காத்திருக்குமாறும் பின்னர் அவரது வாகனத்தை வெளியே நகர்த்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து, இருவருக்கும் இடையே வாய்மொழிப் பரிமாற்றம் ஏற்பட்டு, பின்னர் அது உடல் ரீதியான வாக்குவாதமாக மாறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் நீதவான் பசன் அமரசேகர, அதிகாரியை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) தாக்குதலைக் கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை "விவரிக்க முடியாதது" என்று கூறியதுடன், எந்தவொரு நபருக்கும் எதிராக பொலிஸ் அதிகாரிகள் பலத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 நாட்கள் முன்

சக்தி படித்த குணசேகரன் மறைத்து வைத்த கடிதம், யார் எழுதியது தெரியுமா, என்ன இருந்தது?.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
