யாழில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது
வீட்டில் வைத்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த இளைஞர் ஒருவர் நேற்று (07.09.2023) கைது செய்யப்பட்டார்.
கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய இக் கைது முன்னெடுக்கப்பட்டது.
சந்தேக நபரான இளைஞர் 25 வயதுடையவர் என்றும் அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ். நகரப்பகுதி
இதேவேளை , யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (07.09.2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரி தெ.மேனன் தலைமையிலான குழுவினரால் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
கைதான இளைஞனிடம் இருந்து 40 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
அவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri