கோவிட் தொற்றுடன் மக்கள் மத்தியில் நடமாடிய நபர் பொலிஸாரால் கைது
மட்டக்களப்பில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்கள் மத்தியில் நடமாடிய போது கைது செய்யப்பட்டுள்ளதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஸ் தெரிவித்துள்ளார்.
இவர் இன்று(15) காலை மட்டக்களப்பு நகரில் பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியரான குறித்த நபர் சனிக்கிழமை பி.சி.ஆர் பரிசோதனை மூலம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
தனிமைப்படுத்தலை உதாசீனம் செய்து இன்று காலை மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பரிவிற்குட்பட்ட பொதுச் சந்தையில் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு மக்கள் மத்தியில் நடமாடியபோதே பொலிஸாரும் ,சுகாதார அதிகாரிகளும் கைது செய்துள்ளனர்.
கைதான தொற்றாளர் கரடியனாறு கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு நோய் காவு வண்டி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.




அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam