இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை (VIDEO)
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றையதினம் (30) மாலை 4. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் (01) சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இராமையா இராமஜெயம் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிசார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 9 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
