நாட்டில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 26 வெளிநாட்டவர்கள் கைது
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் 26 பேர் நேற்றைய தினம் (26) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தில் உள்ள தற்காலிக விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த வெளிநாட்டவர்கள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
அவர்களில் பங்களாதேஷ் பிரஜைகள் 16 பேரும், பாகிஸ்தான் பிரஜைகள் இரண்டு பேரும், புருண்டி பிரஜைகள் 02 பேரும், இந்தியா, பிலிப்பைன்ஸ், உகண்டா, எத்தியோப்பியா, கென்யா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் உள்ளடங்கி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் (27) நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தி நாடுகடத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இளம் வயதில் இரண்டு காதலிகள்... எப்ஸ்டீன் தொடர்பால் பதவி இழந்த பெரும் நிறுவனத்தின் தலைவர் News Lankasri
தலைநகரம் பாதுகாப்பாக இல்லை! லண்டனுக்கு இராணுவத்தை அனுப்ப வேண்டிய நேரமிது - நாதிம் ஜஹாவி News Lankasri