தவறான முடிவெடுப்பதை தவிர வேறு வழியில்லை! முன்னாள் எம்.பி பரிதாபம்
தேசியப் பட்டியல் ஊடாக தான் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படாத பட்சத்தில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உுறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான துஷார இந்துனில் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
“கடந்த பொதுத் தேர்தலில் நான் குருநாகல் மாவட்டத்தில் 45 ஆயிரத்து 151 விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தேன். ஐ்க்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டவர்களில் நாடு முழுவதிலும் இருந்து பத்தாவது கூடிய விருப்பு வாக்கு எண்ணிக்கையை நான் பெற்றுள்ளேன்.
வேறு கட்சியில் இணைய முடியாது
இந்நிலையில், கட்சிக்கான வாக்குகளின் அடிப்படையில் என்னால் நாடாளுமன்றம் தெரிவாக முடியவில்லை. அது குறித்து எதிர்க்கட்சித்தலைவருக்கு கடிதம் மூலம் என் நிலைமையை தெளிவுபடுத்தி கடிதம் அனுப்பியுள்ளேன்.
என்னால் வேறு கட்சியில் இணைந்து கொள்ளவும் முடியாது. ஐக்கிய மக்கள் சக்தியில் தான் இருப்பேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்காது போனால் தவறான முடிவெடுக்கும் நிலை தவிர வேறு வழி தெரியவில்லை” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri
