கொழும்பில் குடும்பஸ்தர் படுகொலை: இரு சந்தேகநபர்கள் சிக்கினர்
கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று (5) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 42, 45 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவத்தில், பேலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் குறித்த சந்தேகநபர்களைக் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
