இணைய கேபிள்கள் ஆபத்தில்..! ஒட்டுமொத்த உலகையும் முடக்கிவிடுமா ஈரானின் முடிவு
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் போர் மோசமாகிக் கொண்டே செல்கிறது.
ஏற்கனவே கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது உலக இணையச் சேவையும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் வழியே செல்லும் முக்கிய கடல்நீர் இணையக் கேபிள்களை ஈரான் துண்டித்தால் அது ஒட்டுமொத்த உலகையும் முடக்கிவிடும்.
ஹார்முஸ் முடங்கியதுடன், செங்கடலில் உள்ள பாப் எல்-மண்டேப் பகுதியும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதி குழுக்கள் முடக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
உலகின் டிஜிட்டல் ரத்த நாளங்கள் எனப்படும் ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள் இந்த இரண்டு முக்கிய வழித்தடங்கள் தான் வழியாகவே செல்கின்றன.
வீடியோ அழைப்புகள், மின்னஞ்சல்கள் முதல் வங்கிப் பரிமாற்றங்கள், செயற்கை நுண்ணறிவு சேவைகள் வரை உலக இணையத் தரவுகள் அனைத்தையும் இந்தக் கேபிள்களே கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி....