பலருக்கு வலைவீ்ச்சு: தப்பிக்க வழி இல்லை - அரசாங்கத்தின் எச்சரிக்கை
பொலிஸாருக்கு தெரியாத உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால் அவற்றை முன்வைப்பது நல்லது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், செவ்வந்தியையும் தேடுகின்றோம். இன்னும் உங்களுக்குத் தெரியாத பலரையும் தேடுகின்றோம்.
பொலிஸாரை அதற்காக ஈடுபடுத்தியுள்ளோம். கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் வழக்கு தாக்கல் செய்வோம். அந்த 13 பேரில் பொலிஸ் அதிகாரிகள் இருவரும், சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் இருக்கிறார்.
தப்பிக்க வழி இல்லை
இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அரச இயந்திரத்திற்குள் உள்ள அதிகாரிகளைக் கூட கைது செய்யலாம்.
பொலிஸ்துறை தங்களால் முடிந்த அனைத்தையும் செயற்படுத்துகிறது. எனவே, தப்பிக்க வழி இல்லை என எச்சரித்துள்ளார்.
அத்துடன் எங்களுக்குத் தெரியாத, பொலிஸாருக்கு தெரியாத உண்மைகள் உங்களுக்குத் தெரிந்தால், அவற்றை முன்வைப்பது நல்லது. சட்டம் நிச்சயமாகச் செயல்படுத்தப்படும் என்பதை உறுதியாக நம்பலாம் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Furniture வாங்க பணம் எப்படி வந்தது, செந்தில் கூற கூற ஷாக்கான மீனா, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
