புகைப்படத்தில் உள்ளவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்: உதவிகோரியுள்ள பொலிஸார்
கெக்கிராவ (Kekkirava) பிரதேசத்தில் வீடொன்றில் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்ட சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
கெக்கிராவ பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 50,000 ரூபா மற்றும் நாற்பத்தி ஒரு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருகின்றார்.
இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று சந்தேகநபர் ஹெல்மட், நீண்ட காற்சட்டை மற்றும் பச்சை நிற டி-சர்ட் அணிந்துள்ளார்.
எனவே குறித்த புகைப்படத்தில் உள்ளவர் தொடர்பில் தகவல் தெரிந்தால், கெக்கிராவ பொலிஸ் நிலைய கட்டளைத்தளபதி 071 8591208 அல்லது கெக்கிராவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு 071 8593343 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பணிமனை கோரியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |