மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இம்முறையும் தடையுத்தரவுக்கு தயாராகும் காவல்துறை!
தமிழர் தாயகப் பகுதியில் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய நவம்பர் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது. இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த தடை உத்தரவுகள் நாளைய தினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெறவுள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு காவல்துறையினரால் 12 பேர் மற்றும் அவர்களோடு இணைந்த குழுவினருக்கும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு பலதரப்பட்டவர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய தமிழ்வின் செயதிகளின் தொகுப்பு,