பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
சிறி தலதா வழிபாட்டிற்காக எந்தவொரு காரணத்திற்காகவும் புதிய பக்தர்களை இணைத்துக் கொள்ள மாட்டோம் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
சிறி தலதா வழிபாட்டிற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நேற்று முதல் இதில் பங்கேற்க வேண்டாம் என தலதா வழிபாட்டுக் குழு அறிவித்திருந்தது.
இருப்பினும், தற்போது வரிசையில் உள்ள பக்தர்களுக்கு வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வழிபட வாய்ப்பு கிடைத்தால்...
சுமார் 4 இலட்சம் பக்தர்கள் வரிசையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதோடு. தற்போது வரிசையில் உள்ளவர்கள் சிறி தலதா வழிபாட்டினை நிறைவு செய்வதற்கு, 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை ஆகும் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், பக்தர்கள் சிறி தலதா வழிபாட்டிற்காக கண்டியை நோக்கி வர வேண்டாம் என பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை வழிபட வாய்ப்பு கிடைத்தால், அதுகுறித்து நாளை (26) மாலை அல்லது 27 ஆம் திகதி காலை அறிவிக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறி தலதா வழிபாடு இன்று (25) 8வது நாளாக காலை 11 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri