போதைப்பொருள் பயன்படுத்திய சாரதிகளை பிடித்தால் பணப்பரிசு - நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்
போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் பொலிஸாருக்கு பணப்பரிசு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.
விசேட நடவடிக்கையில் கைதானவர்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட 874 ஓட்டுநர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இவ்வாறான ஓட்டுநர்களைக் கைது செய்யும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 10,000 ரூபாய் பணப்பரிசு வழங்கத் தீர்மானித்துள்ளது என கூறியுள்ளார்.
மத்திய கிழக்கில் திக் திக் நிமிடங்கள் - வெனிசுலாவை விட பெரிய தாக்குதல்! ஈரானுக்கு ட்ரம்பின் பகிரங்க மிரட்டல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |