நாடாளுமன்றத்தில் சிறீதரனை எச்சரித்த கடற்றொழில் அமைச்சர்
நாடாளுமன்றத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(06.01.2026) வருடத்தின் முதல் நாள் நாடாளுமன்ற ஒன்று கூடலிலே குறித்த விவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் அதிகரித்து விட்டதாக சிறீதரன் எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கிளம்பிய வாதம்
இதன்போது, தையிட்டி போராட்டக்களத்தில் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டமையை உதாரணம் காட்டியுள்ளார். அத்துடன், தமிழர் விவகாரம் தொடர்பில் என்.பி.பி. அரசின் அணுகுமுறை பற்றியும் விமர்சித்துள்ளார்.

இதற்கு அமைச்சர் சந்திரசேகர் பதில் கொடுக்கையில்,
"வடக்கில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. பல்பொருள் அங்காடி மற்றும் மதுபானசாலை வைத்துள்ள அரசியல்வாதிகள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதனால் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் தமக்கான இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பதால் பொலிஸ் அராஜகம் என்ற விடயத்தைக் கூறி தமிழ் மக்களைக் குழப்பப் பார்க்கிறார்கள்.
சிறீதரனே, சுமந்திரனிடம் நீங்கள் அவதானமாக இருங்கள். தமிழரசுக் கட்சி என்பது சீரழிந்துபோன கட்சியாக மாறியுள்ளது. அந்தக் கட்சி போதைப் பொருட்கள் நிறைந்த கட்சியாக மாறிவிடக்கூடாது.
அதே சமயம், வடக்கு, கிழக்கில் பொலிஸ் அராஜகம் இடம்பெறவில்லை. அவசரகாலச் சட்டத்தை நாம் தவறாகவும் பயன்படுத்தவில்லை. தையிட்டி விகாரைப் பிரச்சினையைக் கூட நேர்மையான முறையில் தீர்ப்பதற்கே முயற்சிக்கின்றோம். தமிழ் மக்கள் எமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கோபமான சிறீதரன் எம்.பி, முதலில் அமைச்சர் திருந்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், என்.பி.பி. அரசின் பொலிஸ் அராஜகம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri