உயிரை பணயம் வைத்து உழைக்கும் கடற்றொழிலாளர்கள் ! நாடாளுமன்றில் அமைச்சர் முன்வைத்த கோரிக்கை

Parliament of Sri Lanka Economy of Sri Lanka Ramalingam Chandrasekar Paranthu Po
By Thirumal Jan 07, 2026 06:41 AM GMT
Report

நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியமென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு முக்கிய ஒழுங்குவிதிகள் மற்றும் கடற்றொழிலாளர்களின் நலன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று (06.01.2026) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை

திடீரென இடைநிறுத்தப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை வர்த்தக நடவடிக்கை

இயற்கை வளங்களுக்கு பாரிய அனர்த்தம்

சேற்று நண்டுகளைப் பிடிப்பது தொடர்பாக எமது நாட்டுக்கே உரிய ஒழுங்கு விதிகள் அவசியமானவை. குறிப்பாக, சிறிய நண்டுகள் மற்றும் கருவுற்றிருக்கும் நண்டுகளைப் பிடிப்பதன் மூலம் இயற்கை வளங்களுக்குப் பாரிய அனர்த்தம் ஏற்படுகிறது.

உயிரை பணயம் வைத்து உழைக்கும் கடற்றொழிலாளர்கள் ! நாடாளுமன்றில் அமைச்சர் முன்வைத்த கோரிக்கை | En Risking Their Lives Chandrasekaran Speech

1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் சட்டத்தின் 61ஆம் பிரிவின் கீழ், 2024 பெப்ரவரி 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 2371 /35ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் படி இந்த ஒழுங்குவிதிகள் அமைகின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் போது, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான ஒழுங்குவிதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைக்கு வந்து நேரடியாகப் படகுகளை ஆய்வு செய்தனர். அங்கு சட்டவிரோத வலைகள் அல்லது தடைசெய்யப்பட்ட முறைகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அந்த நாட்டுக்கு மீன் ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படலாம்,.

இவ்வாறான இக்கட்டான சூழலில், அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கடுமையாக உழைத்து அந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.

சட்டரீதியான நடவடிக்கை

உலக நடைமுறைக்கு ஏற்ப, 130 மில்லிமீட்டர் சுற்றளவுக்குக் குறைவாக உள்ள நண்டுகளைப் பிடிப்பது மற்றும் வளர்ப்பது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தடை செய்யப்பட்ட வலைகள் அல்லது சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்திப் பிடிக்கப்படும் மீன்கள் ஏற்றுமதிக்கு நிராகரிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வுகளின் போது இவ்வாறான தடைகள் ஏற்படாமல் அமைச்சின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

உயிரை பணயம் வைத்து உழைக்கும் கடற்றொழிலாளர்கள் ! நாடாளுமன்றில் அமைச்சர் முன்வைத்த கோரிக்கை | En Risking Their Lives Chandrasekaran Speech

அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருவதில் சேற்று நண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, எனவே அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் கடற்றொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்.

தற்போது சமூகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் நடந்து வரும் சூழலில், உண்மையாக உழைக்கும் கடற்றொழிலாளர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

ஓய்வூதியத்திட்டங்கள் பல தோல்வி 

கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் பல தோல்வி அடைந்துள்ளன அல்லது செயலற்றுப் போயுள்ளன. எனவே,கடற்றொழிலாளர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு வலுவான ஓய்வூதிய முறையை விரைவாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது கடற்றொழிலாளர்களின் வயதான காலத்தில் வறுமையின்றி வாழவும், இளைஞர்களை இந்தத் தொழிலில் ஈர்க்கவும் இந்தத் திட்டம் உதவும். அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக மீனவர்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளனர். இந்த சூறாவளியால் 13 பலநாள் படகுகள் முற்றாக அழிந்துள்ளன.

உயிரை பணயம் வைத்து உழைக்கும் கடற்றொழிலாளர்கள் ! நாடாளுமன்றில் அமைச்சர் முன்வைத்த கோரிக்கை | En Risking Their Lives Chandrasekaran Speech

மேலும் 215 பாரம்பரியப் படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மற்றும் 3 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான வலைகள் மற்றும் படகுகளை இலவசமாக மீளப் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவையான மானியங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதியாக, கடற்றொழிலாளர்களின் சொந்த நிதியின் மூலம் பலப்படுத்தப்படும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் சபையின் ஒத்துழைப்பை அவர் கோரினார்.

நாட்டின் அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தருவதில் சேற்று நண்டுகள் பாரிய பங்கினை வகிக்கின்றன.

மீனவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து நாட்டின் வருவாய்க்காகவும், மக்களின் புரதச்சத்து தேவையை நிவர்த்தி செய்யவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் என்றும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு கல்வியமைச்சின் முக்கிய அறிவிப்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்! பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US