நாவலர் பெருமானின் குரு பூஜை தினத்திலும் பொலிஸார் கெடுபிடி
சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டாற்றிய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலரின் குரு பூஜை தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்ட போது ஆலயத்திற்கு வெளியில் பெருமளவான புலனாய்வு பிரிவினர் குழுமியிருந்ததுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுப்பட்டிருந்தனர்.
வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஆறுமுகநாவலரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
கருமாரி அம்மன் தேவஸ்தானத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ நா.பிரபாகரக்குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது இன்று மாவீரர் தினமாகையால் ஆலயத்திற்கு வெளியில் பெருமளவான புலனாய்வு பிரிவினர் குழுமியிருந்ததுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் ஆலயத்திற்குள் வருகைதந்து புகைப்படம் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
