யாழில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், கடைகள் எரிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 24 வயதான சந்தேக நபர் உடுவில் பகுதியில் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்த கார், மோட்டார் சைக்கிள், தயாரிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் வாள்கள் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸார் நடவடிக்கை
அதனையடுத்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று சந்தேக நபர் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, சந்தேக நபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெளிநாட்டில் உள்ள நபரொருவர் மூலம் பணம்பெற்று வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த மேலும் ஐவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |