யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை:பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை(Photos)
போதைப் பாவனை அதிகரித்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மோப்ப நாய் சகிதம் பருத்தித்துறை பொலிஸார் நேற்று முன்தினம்(10.11.2022) பிற்பகல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமைப் பொலிஸ் பரிசோதகர் பியந்த அமரசிங்க தலமையிலான பொலிஸாரே இவ் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
போதைப்பொருள் பாவனை
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பருத்தித்துறை சந்தை, பருத்தித்துறை முச்சக்ரவண்டி தரப்பிடம், மந்திகைச் சந்தை, மந்திகையில் வைத்தியசாலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ், கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில்நேற்று கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பொக்கனை பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுற்றி வளைப்பின் போது ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 24 போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக செய்தி-கஜிந்தன்














16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
