மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத விடுதிகள்: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்கும் இடங்கள் உட்பட சகல சட்டவிரோத 'ஸ்பா' நிலையங்களையும் மூடுவதற்கு கடுவெல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட கடுவெல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் கன் வீரசிங்க இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.
அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கி வந்த 13 நிலையங்களின் விளம்பர பலகைகளை அகற்றும் பணியில் பொலிஸாரும் கடுவெல மாநகர சபை உத்தியோகத்தர்களும் ஈடுபட்டுள்ளதுடன், இந்த வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு இதற்கு முன்னதாக பல தடவைகள் அறிவித்துள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் நடவடிக்கை
அதன்படி, கடுவெல பிரதேசத்தில் பல இடங்களில் நிறுவப்பட்டிருந்த அனைத்து நிலையங்களின் பெயர் பலகைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து காட்சிப் பொருட்களையும் கடுவெல பொலிஸார் மற்றும் கடுவெல மாநகர சபை அதிகாரிகள் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (09.07.2023) அகற்றியுள்ளனர்.
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் யோசனைக்கு அமைய ஏனைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைக்கமைய இது நடைமுறைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பரிசோதகர் கன் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறும் இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பிரதேசத்தின் அனைத்து மதத் தலைவர்களும் மக்களும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
