இலங்கை இராணுவத்தினரால் தவறுதலாக கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி
இலங்கையில் உள்ள விருந்தகம் ஒன்றின் அருகில் இடம்பெற்ற போதைப்பொருள் சோதனையின் போது விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே இரகசிய பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல்களின்படி வெலிகமையில் உள்ள ஒரு கடற்கரை விருந்தகத்தில்; இரகசிய பொலிஸ் அதிகாரிகள் இருந்துள்ளனர்.
ஒடுக்குமுறை நடவடிக்கையில் இடம்பெற்ற முதலாவது மரணம்
இந்தநிலையில் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் பொலிஸாரை வலுப்படுத்த இராணுவத் துருப்பினர் அங்கு விரைந்தனர், இதன்போது சம்பவ இடத்திலிருந்து வேகமாக புறப்பட்ட வாகனம் ஒன்றின் மீது படையினர் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
எனினும் குறித்த வாகனத்தில் இரகசிய பொலிஸ் அதிகாரிகள் இருந்ததை இராணுவ படையினர் அறிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தின் மீது ஆரம்பிக்கப்பட்ட ஒடுக்குமுறை நடவடிக்கையில் இடம்பெற்ற முதலாவது மரணம் இதுவாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
